விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் "ஒரு துளி அதிக சாகுபடி" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியப் பயிலரங்கம் நடத்தப்பட்டது

Posted On: 31 MAY 2023 6:45PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் “ஒரு துளி அதிக சாகுபடி” என்ற தலைப்பில் தேசியப் பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் நுண்ணீர் பாசனத்தை அதிகரிப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், நுண்ணீர்ப் பாசனத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும், மானாவாரிப் பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தையும் உறுதி செய்ய முடியுமெனக் கூறினார்.

2015-16-ம் ஆண்டிலிருந்து ஒரு துளி அதிக சாகுபடி திட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-16-ம் ஆண்டு முதல் இன்று வரை 78 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் உள்ளது. இத்திட்டத்திற்கு முந்தைய 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பரப்பளவை விட இது சுமார் 81% அதிகமாகும்.

மேலும், நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள புதுமையான முறைகளை பகிர்ந்து கொண்டன. ஜல் சக்தி அமைச்சகத்தின் முன்னணி வல்லுநர்கள் நுண்ணீர் பாசனத்தின் அவசியத்தையும், நிலத்தடி நீர் மேலாண்மையின் அதன் பங்கையும் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து ஐந்து சிறந்த கிராமப் பஞ்சாயத்துகள், அதிக நுண்ணீர் பாசனம் மற்றும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக பாராட்டப்பட்டன.

******

CR/AP/KRS


(Release ID: 1928802) Visitor Counter : 215


Read this release in: English , Urdu , Marathi