அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மருந்துத் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் - டாக்டர். ஜிதேந்திர சிங்

Posted On: 31 MAY 2023 2:22PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் அறிவியல் திறன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியாவின் அறிவியல் மனப்பான்மை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்ட முன்னணி நாடுகளின் பட்டியலுக்கு  இந்தியாவை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

காசியாபாத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு மையத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிதாக பணியமர்த்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கான 46 வது ஊக்குவிப்பு கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், சில நேர்மையற்ற பகுதிகளில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்ட போதிலும், நாடு வெற்றிகரமாக கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடியது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், இந்திய மருந்து நிறுவனங்கள் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்கின. மேலும் கோவிட் 19 பரவுவதை எதிர்த்துப் போராடியதுடன் மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளுக்கும் மத்திய அரசு  தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது என்று தெரிவித்தார்.

உலகின் 130 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்தது. 2022 இல் 40 வது இடத்திற்கு முன்னேறியது. தனது உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் வழியாக  உலகளாவிய தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை நாடு கண்டுள்ளது  என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையிலும் (77,000)  யூனிகார்ன்களின் எண்ணிக்கையிலும் (107) உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளுக்கான மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

******

AD/PKV/KRS


(Release ID: 1928683) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Marathi