எஃகுத்துறை அமைச்சகம்
ஆர்ஐஎன்எல் நிறுவனத்துக்கு மதிப்புமிக்க “கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023’’ பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
30 MAY 2023 6:50PM by PIB Chennai
ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் நிறுவனம் ஆர்ஐஎன்எல் ,2022-23 ஆம் ஆண்டில் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்பிற்காக பாதுகாப்புச் சிறப்புப் பிரிவின் கீழ் மதிப்புமிக்க வழங்கிய கிரீன்டெக் பாதுகாப்பு விருதைப் பெற்றுள்ளது.
மதிப்புமிக்க கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023 விருதை, 21வது வருடாந்திர கிரீன்டெக் விருது வழங்கும் விழாவில், அஸ்ஸாமின் முன்னாள் ஆளுநர் திரு ஜகதீஷ் முகியிடமிருந்து, ஆர்ஐஎன்எல் சார்பாக, இயக்குநர் திரு ஏ கே பாக்சி பெற்றார்.
21வது கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023, க்ரீன்டெக் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டு, தீ, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் வணிக எதிர்காலத்தை வரையறுக்கும் பொறுப்பை ஏற்கும் சிறந்த நிறுவனங்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
******
AP/PKV/KRS
(रिलीज़ आईडी: 1928401)
आगंतुक पटल : 231