சுரங்கங்கள் அமைச்சகம்
நிலைத்தன்மையும், திறனும் இந்தியாவின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளன: மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி
Posted On:
29 MAY 2023 3:07PM by PIB Chennai
இந்த மத்திய அரசு ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைத்தன்மையும், திறனும் இந்தியாவின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளன என்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மும்பை ஐஐடியில் நடைபெற்ற முதலாவது சுரங்கப் புத்தொழில் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார். இந்த சுரங்கப் புத்தொழில் உச்சி மாநாட்டில் 82 புத்தொழில் நிறுவனங்களும், 140 பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த முதலாவது மாநாடு சுரங்கத்துறையில் தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய சிந்தனைகளும், திட்டங்களும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்தியா அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்தாலும், இறக்குமதியும் அதிகளவில் செய்யப்படுவதாக அவர் கூறினார். 2025-26-ம் நிதியாண்டுக்குள் இறக்குமதியை நிறுத்தும் நோக்கில் அரசு செயல்படுவதாக திரு பிரல்ஹத் ஜோஷி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நிலக்கரித்துறை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அமிர்த கால தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டும் வகையில், இந்த உச்சி மாநாடு அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, சுரங்கத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த கண்காட்சியை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி தொடங்கிவைத்தார்.
******
AD/PLM/RS/KRS
(Release ID: 1928140)
Visitor Counter : 168