பாதுகாப்பு அமைச்சகம்
மறைந்த அட்மிரல் ரொனால்ட் லின்ஸ்டேல் பெரேராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்தியக் கடற்படை பெங்களூருவில் 2023 மே 25 – 27 வரை அஞ்சலி செலுத்தியது
Posted On:
28 MAY 2023 4:06PM by PIB Chennai
மறைந்த அட்மிரல் ரொனால்ட் லின்ஸ்டேல் பெரேராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பெங்களூரில் மே 25 – 27-ம் தேதி வரை நடைபெற்றது. முன்னாள் கடற்படைத் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 2023 மே 27 அன்று பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் சிறப்புரை ஆற்றினார்.
40 ஆண்டுகளாக (1943 முதல் 1982 வரை) இந்தியக் கடற்படையில் அட்மிரல் பெரேரா மேற்கொண்ட சாதனைகளை கருத்தரங்கில் பங்கேற்ற பேச்சாளர்கள் நினைவு கூர்ந்தனர். அட்மிரல் பெரேரா நவீன இந்தியக் கடற்படையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
பெங்களூருவில் உள்ள அட்மிரல் பெரேராவின் நினைவிடத்தில், ரியர் அட்மிரல் கே.எம். ராமகிருஷ்ணன், மூத்த அதிகாரிகளுடன் இணைந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் அமைப்பான நேவி பவுண்டேஷன் பெங்களூருவும் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்றது. ஓய்வுக்குப் பிறகு பெங்களூருவில் குடியேறிய அட்மிரல் ஆர்.எல். பெரேரா, 1993 அக்டோபர் 14-ம் தேதி அவர் மறையும் வரை முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக அயராது உழைத்தவர்.
இது போன்ற நிகழ்வுகளில் ஓய்வுபெற்ற ஆயுதப்படை வீரர்கள் ஒன்றுகூடுவது தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். தலைமைத்துவம், நேர்மை, துணிவு ஆகியவற்றில் அட்மிரல் பெரேராவைப் பின்பற்றுமாறு மூத்த வீரர்கள் இளம் வீரர்களை அறிவுறுத்தினர்.
***
AD/CR/DL
(Release ID: 1927906)
Visitor Counter : 177