எரிசக்தி அமைச்சகம்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்துடன் தூய்மையான எரிசக்தி மற்றும் பருவநிலை கூட்டாண்மை; மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு

Posted On: 27 MAY 2023 1:52PM by PIB Chennai

ஏழை மக்களுக்கு ஆற்றல் அணுகலை வழங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைக்கின்றன

 

விரைவாக பசுமையாக மாற வேண்டும் என்று நம்பும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் இந்தியா எதிர்பார்க்கிறது: அமைச்சர் ஆர் கே சிங்

 

24 மணிநேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சாத்தியமானதாக மாற்ற சேமிப்பகத்தின் விலையைக் குறைக்க உலகளாவிய முயற்சிகள் தேவை: ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர்

 

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்சை சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

 

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர், இந்தியா வளர்ந்து வருவதால், மின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். குறைந்த அளவில் கரியமில வாயு வெளிப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதோடு ஆற்றல் மாற்றம் மற்றும் பருவநிலை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது.

 

"சேமிப்புச் செலவைக் குறைக்க, ஆற்றல் சேமிப்புக்கான உற்பத்தி வசதிகளைச் சேர்க்க வேண்டும்" மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்க இந்தியா எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். மிகவும் மேம்பட்ட சூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்களுக்கான உற்பத்தித் திறன் வரவிருக்கிறது என்று அவர் கூறினார். மேலும் 2030ஆம் ஆண்டு வாக்கில் மொத்த உற்பத்தி திறன் 80 ஜிகாவாட் அளவிற்கு உயரும். இது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்து ஏற்றுமதிக்கான உபரியை வழங்கும். இது உலகின் விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளைத் தீர்க்கும். 24 மணிநேரமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதற்கும், நிகர பூஜ்ஜியத்திற்கு மாறுவதற்கும் சேமிப்புத் தேவை என்று அமைச்சர் கூறினார். சேமிப்புத் திறனைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதில் மற்ற நாடுகளையும் ஊக்குவிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை அவர் நாடினார். மேலும் எரிசக்தி சேமிப்பிற்கான உற்பத்தி வசதிகளைச் சேர்ப்பதன் மூலம் சேமிப்பகத்தின் விலை குறைகிறது.

 

"பசுமை ஹைட்ரஜனுக்கான பயணம் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்"

அமைச்சர், தொழில்துறையானது பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதையும், பயணம் தொடர வேண்டுமானால் தடைகள் இன்றி சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். பசுமை ஹைட்ரஜனின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றால் எலக்ட்ரோலைசர் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஆற்றல் செயல்திறனில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்காக இந்தியாவைப் பாராட்டினார். மேலும் எரிசக்தி செயல்திறனின் நிகழ்ச்சி நிரலை உலக அரங்கிற்கு கொண்டு வருவதற்கான வழிகளை இரு தரப்பினரும் கண்டறிந்து உலகளாவிய ஆற்றல் திறன் இலக்குகளை அமைக்க உதவுமாறு பரிந்துரைத்தார்.

 

பசுமை ஹைட்ரஜனைக் கொண்டு செல்வதற்கான அதிக செலவுகளைக் கருத்தில் கொண்டு, பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இடங்கள் தொழில்துறை முதலீட்டை ஈர்க்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 80% 2-சக்கர வாகனங்கள், 3-சக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 50% 4-சக்கர வாகனங்கள் பசுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பசுமை இயக்கத்திற்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் அவர் கூறினார்.

 

வரும் காலங்களில் ரசாயன உரங்களை தவிர்த்து விவசாயத்தை நச்சு இல்லாத தன்மையை ஏற்படுத்த அரசின் இலக்கை வெளிப்படுத்தினார்.

 

ஆப்பிரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எரிசக்தி கிடைக்காமல் சூரிய சக்தியை கொண்டு செல்வதில் சர்வதேச சோலார் கூட்டணியின் பங்கு குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். தூய்மையான ஆற்றலை அவர்கள் பெறுவதற்கு நாம் உதவ வேண்டும். மேலும் தூய்மையான ஆற்றலுக்கு பங்களிக்க சர்வதேச சூரியக் கூட்டணியுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்த பரிந்துரையை ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர் மனதார வரவேற்றுள்ளார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம், ஐஎஸ்ஏ, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை கூட்டாண்மை அமைக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின்படி, ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை நவீன, வளம்-திறன் மற்றும் போட்டிப் பொருளாதாரமாக மாற்ற முயல்கிறது. 2050க்குள் பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வுகள் இல்லை. பொருளாதாரத்தை வளர்ப்பது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது இவற்றில் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.

 

அடுத்த தலைமுறை ஐரோப்பிய ஒன்றிய மீட்புத் திட்டத்தில் இருந்து 1.8 டிரில்லியன் யூரோ முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு ஆண்டு பட்ஜெட் ஆகியவை ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்திற்கு நிதியளிக்கும்.

***

AP/CJL/DL



(Release ID: 1927726) Visitor Counter : 116