அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவின் தேசிய பருவநிலை ஆய்வுத் திட்டம் சர்வதேச பருவநிலை ஆய்வு மாநாட்டில் வெளியிடப்பட்டது

Posted On: 26 MAY 2023 5:01PM by PIB Chennai

பம்பாய் ஐஐடியில் உள்ள பருவநிலை ஆய்வுக்கான உயர் சிறப்பு மையத்தில் இன்று (26.05.2023) நடைபெற்ற சர்வதேச பருவநிலை ஆய்வு மாநாட்டில் இந்தியாவின் தேசிய பருவநிலை ஆய்வுத் திட்டம் வெளியிடப்பட்டது.  பருவநிலை மாற்றம் குறித்து 2030 மற்றும் அதற்கு பிறகான தேசிய முயற்சிகளை புரிந்து கொள்வதற்கும், ஒத்துழைப்புக்கும் இது வழிவகுத்துள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் எஸ் சந்திரசேகர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்கள் உச்சநிலையை அடைந்துள்ளன, ஆனால் அதற்கான தடுப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளன என்றார்.  கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட மாறிய மனிதகுல நடத்தைக் காரணமாக சுற்றுச்சூழலில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள், நிலைமையை சமாளிக்க மதிப்புமிக்க பாடங்களை வழங்கியுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பொறுப்புடன் நாம் செயல்பட்டால் எதிர்காலத் தலைமுறைக்கு நீடிக்க வல்ல குறிக்கோளினை ஒப்படைப்பது உண்மையில் சாத்தியம்தான் என்று அவர் கூறினார்.

பருவநிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள இந்தியாவின் அண்மைக் கால முன்னேற்றம் மற்றும் 2030க்கான தொலைநோக்கு பார்வைப் பற்றி விவாதிப்பதற்கு நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் அதிகமான பருவநிலை விஞ்ஞானிகள், மாணவர்கள், நிபுணர்கள், கொள்கை வகுப்போர் கலந்து கொண்டுள்ளனர். 

******

AD/SMB/MA/KPG



(Release ID: 1927596) Visitor Counter : 135


Read this release in: English , Urdu , Hindi , Marathi