மத்திய பணியாளர் தேர்வாணையம்

குடிமைப் பணிகள் தேர்வில் தாங்கள் இறுதியாக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக 2 நபர்கள் தவறாக உரிமைக் கோரியிருப்பது குறித்து யுபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது

Posted On: 26 MAY 2023 4:17PM by PIB Chennai

நேர்மையாக பரிந்துரைக்கப்பட்ட 2 தேர்வாளர்களுக்கு மாறாக குடிமைப் பணிகள் தேர்வில் தாங்கள் இறுதியாக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக 2 நபர்கள் தவறாக உரிமைக் கோரியிருப்பது குறித்து யுபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த இரு நபர்களின் உரிமைகோரலும் தவறானவை. தங்களின் உரிமைகளுக்கு சாதகமாக போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.

யுபிஎஸ்சி நடைமுறை வலுவானது, எந்த தவறுக்கும் வழியில்லாதது. இவர்கள் கூறுவது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. போலியான இரு தேர்வர்களின் உரிமைகோரல்கள் தவறு என்பதற்கான விளக்கம் தரப்படுகிறது.

திருமதி ஆயிஷா மக்ரானி த/பெ. திரு சலீமுதீன் மக்ரானி என்பவரின் சரியான பதிவு எண் 7805064. இவர் 2022 ஜூன் 5-ந் தேதி நடைபெற்ற தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெறாதது மட்டுமின்றி அடுத்தகட்ட தேர்வுக்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 7811744 என்ற பதிவு எண் பெற்றுள்ள திருமதி ஆயிஷா ஃபாத்திமா த/பெ. திரு நசீருதீன் உண்மையான தேர்வாளர் ஆவார். இவர் குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவில் 184-வது தரவரிசையைப் பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதே போல் 2208860 என்ற பதிவு எண் கொண்ட திரு துஷார் த/பெ. திரு.பிரிஜ் மோகன் என்பவரும் தொடக்க நிலை தேர்விலேயே தேர்ச்சி பெற தவறியதோடு அடுத்தக்கட்டத்திற்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 1521306 என்ற பதிவு எண் கொண்ட பீகாரைச் சேர்ந்த திரு துஷார் குமார் த/பெ. திரு.அஸ்வினி குமார் சிங் உண்மையான தேர்வாளர் 44-வது தரவரிசை பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

எந்தவித சரிபார்ப்பும் செய்யாமல் பல ஊடக அலைவரிசைகளும், சமூக ஊடகப் பக்கங்களும் பொறுப்பின்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. இது போன்ற செய்திகளை வெளியிடும் போது யுபிஎஸ்சி-யிடம் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்சி-யின் தேர்தல் விதிகளின்படி தவறான தகவல்களை அளித்த இரு தேர்வர்களும் குற்றமிழைத்திருப்பதோடு அவர்களின் மோசடியான செயல்களுக்காக சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

******

AD/SMB/RR/KPG



(Release ID: 1927546) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Hindi