வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு நாட்டின் தற்போது உள்ள மின்னணு வர்த்தக சூழலுக்கு ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 22 MAY 2023 5:45PM by PIB Chennai

மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு நாட்டின் தற்போது உள்ள  மின்னணு வர்த்தக சூழலுக்கு ஜனநாயகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளிகள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு என்ற நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக  அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மின்னணு வர்த்தகத்திற்கான திறந்த வெளி கட்டமைப்பு வளர்ச்சிக்கான எந்திரம் என்றும் தொழில் துறையை முற்றிலும் மறுசீரமைப்பதற்கான  திறனுடையது என்றும் கூறினார். இந்த கட்டமைப்பில் உள்ள ஏராளமான விற்பனையாளர்கள் மூலம் அதன் தாக்கத்தை விளக்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கட்டமைப்புப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, இந்த கட்டமைப்பின் முதலாமாண்டு வெற்றிகுறித்து பகிர்ந்து கொண்டனர்.

******

AD/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1926452) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu