அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

3வது ஜி 20 சுற்றுலா கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்(தனிப் பொறுப்பு), டாக்டர். ஜிதேந்திர சிங் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்

Posted On: 21 MAY 2023 5:27PM by PIB Chennai

3வது ஜி20 சுற்றுலா கூட்டம் ஸ்ரீநகரில் மே 22 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறுவது, கடந்த 9 ஆண்டுகளில் குறிப்பாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்  முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அறிகுறியாகும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

 

ஸ்ரீநகரில் நடைபெற உள்ள 3வது ஜி20 சுற்றுலா கூட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

 

தொடக்க விழாவைத் தொடர்ந்து, திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உத்திகளை மையமாகக் கொண்டு 'பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான திரைப்பட சுற்றுலா' மற்றும் 'சுற்றுச்சூழல் சுற்றுலா' என்ற தலைப்பில் இரண்டு முக்கியப்பணி அமர்வுகள் நடைபெறும். பிரதிநிதிகள் இடையே இருதரப்பு சந்திப்புகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறுவது, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது.

 

மற்ற இடங்களைப் போலவே இதுவும் முழுமையான, ஆரோக்கியமான ஜி 20 கூட்டமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் மையம் என்று நம்பப்பட்டது. இப்போது ஜம்மு & காஷ்மீர் முழுவதும்  நாட்டின் வேறு எந்த நகரத்தையும் போலவே சிறந்த செயல்பாட்டில் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த அறிகுறியாகும்.

 

ஸ்ரீநகரில் நடைபெறும் நிகழ்வு மற்ற ஜி20 நிகழ்வுகளைப் போன்று தொழில்ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 

பிரதிநிதிகள் காஷ்மீரில் தங்கியிருக்கும் போது கூடுதலான நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன அவற்றில் ஒன்று திரைப்படங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்திய அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்கின்றனர். பூலோகத்தில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீரின் பல்வேறு அம்சங்களையும் அழகையும் முன்னிலைப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு நிகழ்வை ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேச  நிர்வாகம் நடத்துகிறது. கலாசார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

டாக்டர். ஜிதேந்திர சிங், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜம்மு & காஷ்மீருக்குச் செல்வது தடையாக இருந்ததாகவும், 1990 முதல் இதுபோன்ற நிகழ்வுகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறினார். ஆனால்  ஸ்ரீநகரில் ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெறுகிறது. அந்த இடம் ஸ்ரீநகர் என்பது கூடுதல் அழகையும் உற்சாகத்தையும் சேர்க்கிறது, என்றார்.

 

பிரதமர் மோடியின் கீழ் நடந்த ஜம்மு & காஷ்மீரின் மாற்றப்பட்ட சூழ்நிலையை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு என்று தான் நம்புவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

இளைஞர்களைப் பற்றி பேசிய அவர், 70% மக்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், காஷ்மீர் இளைஞர்கள் அதிக ஆர்வமுள்ளவர்கள் என்றும் கூறினார். பிரதமர் வழங்கியுள்ள ஸ்டார்ட்-அப் மற்றும் பிற வாய்ப்புகளை அவர்கள் தவற விட விரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

அதனால்தான் பொதுவாக ஜம்மு & காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள மக்கள் இந்த நிகழ்வை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறார்கள் என்று அமைச்சர் கூறினார். சுற்றுலா வருவாயை உருவாக்குவதன் அடிப்படையில் சில வணிக நன்மைகளைப் பெறமுடியும் என்று மக்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குத் திரும்பி வருவது குறித்தும், திரைப்படத் துறையினர் அதிக ஆர்வம் காட்டுவது குறித்தும் பேசிய அமைச்சர், திரைப்பட படப்பிடிப்பு காஷ்மீருக்கு புதிதல்ல என்றார்.

 

தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமானோர் சுற்றுலாவுக்கு காஷ்மீர் வந்துள்ளனர். தங்குமிடங்கள் தாண்டி மக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு இடம் தரும் நிலை உருவாகியுள்ளது. இது காஷ்மீர் மக்களுக்குப் புதிது என்றும் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது என்ற செய்தியை இந்தியா தெரிவிக்க விரும்புவது மட்டுமல்ல அது தான் உண்மை என்று முதன்முறையாக ஜம்மு & காஷ்மீருக்கு வருகை தரும் ஜி20  நாடுகளின் பிரதிநிதிகள் நேரில் நிலைமையைக் கண்டு உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் ஜம்மு & காஷ்மீர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் உண்மையான தூதர்களாக இருப்பார்கள். ஏனெனில் இந்த இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உருவானது.

***

AD/CJL/DL


(Release ID: 1926126) Visitor Counter : 448
Read this release in: English , Urdu , Hindi , Marathi