அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கடந்த 9 ஆண்டுகளில் முந்தைய காலங்களில் நம் நாட்டிலிருந்து திருடப்பட்ட 231 பழங்காலப் பொருட்கள் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 20 MAY 2023 5:47PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளில் முந்தைய காலங்களில் திருடப்பட்ட 231 பழங்காலப் பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளாக கடந்த 2014-ம் ஆண்டு வரை, இந்தியாவைச் சேர்ந்த சுமார் 13 விலைமதிப்பற்ற பாரம்பரிய பழங்காலப் பொருட்கள் மட்டுமே முந்தைய அரசுகளால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் அவர் கூறினார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், 2014க்குப் பிறகு மொத்தம் 231 பழங்காலப் பொருட்கள் திரும்பக் கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 244 பழங்காலப் பொருட்களாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

 

பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த 3 நாள் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-க்கு வருகை தந்த டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

 

சர்வதேச அருங்காட்சியக தினமான மே 18-ம் தேதியன்று பிரதமர் மோடி சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ தொடங்கி வைத்தார்.

 

இந்தக் கண்காட்சியில் வகுப்புகள், குழு விவாதங்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அமர்வுகளும் அடங்கும்.

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் கீழ், மத்திய கலாச்சார அமைச்சகம் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ ஏற்பாடு செய்துள்ளது. இது மே 18-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.

***

AD/CR/DL



(Release ID: 1925943) Visitor Counter : 161


Read this release in: English , Urdu , Hindi , Telugu