பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்லாட்சிக்கான தேசிய மையம், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தின் 95 அரசு அதிகாரிகளுக்கான 2 வார திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கியது

Posted On: 20 MAY 2023 1:18PM by PIB Chennai

நல்லாட்சிக்கான தேசிய மையம், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தின்  மூன்று தொகுதி அரசு அதிகாரிகளுக்கான 2 வார திறன் மேம்பாட்டு பயிற்சியை மே 19, 2022 அன்று புதுதில்லியில் நிறைவு செய்தது.

இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில், குறிப்பாக அண்டை நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகளிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் நல்லாட்சிக்கான தேசிய மையம்  ஆழ்ந்த உறுதியுடன் உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் பரிந்துரைக்கப்பட்ட 'வசுதைவ குடும்பகம்' மற்றும் 'அருகமை நாடுகள் முதலில்' கொள்கையுடன் இணைந்த  திறன்-மேம்பாட்டுத் திட்டங்கள் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், நல்ல நிர்வாகம், மேம்பட்ட சேவை வழங்கல் மற்றும் இறுதியில் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர். வி.கே.பால், கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047ம் ஆண்டுக்கான  தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய அவர்,  இது வளமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதைச் சுற்றி வருகிறது என்றார். 2047 ஆம் ஆண்டிற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களைத் தழுவியதன் மூலம், அந்தந்த நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, உள்ளடக்கிய வளர்ச்சி, உயர் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை நிர்வகித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

***

AD/PKV/DL


(Release ID: 1925862) Visitor Counter : 220


Read this release in: English , Urdu , Hindi , Telugu