ரெயில்வே அமைச்சகம்
இந்தக் கோடை காலத்தில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே 6369 முறை சிறப்பு ரயில்களை இயக்குகிறது
Posted On:
19 MAY 2023 5:14PM by PIB Chennai
இந்த ஆண்டு கோடைப் பருவத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகப்படியான நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6369 முறை ரயில் பயணங்களை இயக்குகிறது. 2022ல் இயக்கப்பட்ட மொத்த கோடைகால சிறப்பு ரயில்களுடன் (4599 பயணங்கள் 348 ரயில்கள்) ஒப்பிடும்போது, இந்திய ரயில்வே இந்த ஆண்டு 1770 முறை கூடுதலாக பயணங்களை இயக்குகிறது. இந்த வருடம், இணைக்கப்பட்ட முக்கிய இடங்கள் பாட்னா-செகந்திராபாத், பாட்னா-யஸ்வந்த்பூர், பரௌனி-முசாபர்பூர், தில்லி-பாட்னா, புது தில்லி-கத்ரா, சண்டிகர்-கோரக்பூர், ஆனந்த் விஹார்- பாட்னா, விசாகப்பட்டினம்-புரி-ஹவுரா, மும்பை-பாட்னா, மும்பை-கோரக்பூர்.
மொத்தம், 6369 பயணங்களைச் செய்யும் இந்த 380 சிறப்பு ரயில்களில் 25,794 பொதுப் பெட்டிகள் மற்றும் 55,243 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. பொதுப் பெட்டிகளில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது,
கோடைக்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் சிறப்புப் பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், தில்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.
Release ID: 1925533
AD/PKV/KRS
******
(Release ID: 1925598)
Visitor Counter : 219