பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நிலையான விமான எரிபொருள், மேக் இன் இந்தியா தொழில்நுட்பம் விமானத் துறையின் தன்னிறைவு மற்றும் கார்பன் குறைப்பு நடவடிக்கைக்கான முக்கிய படியாகும்: ஹர்தீப் சிங் பூரி

Posted On: 19 MAY 2023 12:33PM by PIB Chennai

பிரதமரின்  ஆணைக்கிணங்க, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா எரிசக்தியில் தன்னிறைவு காண வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, வலியுறுத்தினார். "இந்த தொலைநோக்கை நனவாக்க பெட்ரோலியத் துறை மகத்தான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை" என்று திரு பூரி மேலும் கூறினார். இன்று புது தில்லியில் தொழில்துறை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய  கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் கலந்து கொண்டார்.

 

விமானப் போக்குவரத்துத் துறையை கார்பன் குறைப்பு செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலையான விமான எரிபொருள்  கலவையைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் வணிகப் பயணிகள் விமானம் இன்று வெற்றிகரமாக பறந்தது. ஏர் ஏசியா விமானம்  புனேவில் இருந்து தில்லிக்கு இந்த எரிபொருள்  மூலம் இயக்கப்பட்டது, இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  வழங்கிய உள்நாட்டு உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பிரஜ் இண்டஸ்ட்ரீஸ்  தயாரித்ததாகும். இந்த சிறப்பு விமானத்தை  அமைச்சர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு  ஹர்தீப் சிங் பூரி, 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கிய நாட்டின் முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று விவரித்தார்.  விமானப் பயணத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிக்க உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்ற  தற்சார்பு இந்தியாவுக்கான  பிரதமரின் தொலைநோக்கை மீண்டும் வலியுறுத்தினார்.

மாற்று மற்றும் நிலையான எரிபொருள் ஆதாரங்களின் அவசியத்தை வலியுறுத்திய திரு ஹர்தீப் சிங் பூரி, “சமீபத்திய ஆண்டுகளில் நிலையான எரிபொருள் உற்பத்தி தொழில்நுட்பம் கணிசமாக முன்னேறியுள்ளது. பாரம்பரிய ஜெட் எரிபொருள்களைப் போலன்றி, விவசாயக் கழிவுகள், நகராட்சி திடக்கழிவுகள் மற்றும் வனவியல் எச்சங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து இது  தயாரிக்கப்படுகிறது. வழக்கமான ஜெட் எரிபொருளுடன் ஒப்பிடும்போது இந்த பசுமைக்குடில் வாயு உமிழ்வை 80% வரை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது’’ என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1925417

AD/PKV/KRS

******(Release ID: 1925517) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Marathi , Hindi