பாதுகாப்பு அமைச்சகம்

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம்

Posted On: 19 MAY 2023 10:17AM by PIB Chennai

திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கடற்படையிடம் ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல் ஒப்படைக்கப்படும். திட்டம்-75 இன் கீழ் 24 மாதங்களில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலின் ஒத்திகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சி தற்சார்பு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும். ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல், கடலில் தீவிர ஒத்திகையில் ஈடுபட உள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1925363

******

AP/BR/KRS



(Release ID: 1925435) Visitor Counter : 205


Read this release in: Marathi , English , Urdu , Hindi