சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தேசிய ஆயுஷ் இயக்க மாநாட்டில் தொடக்க உரையாற்றினார்

Posted On: 18 MAY 2023 3:35PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஆயுஷ் இயக்க மாநாட்டில் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில், உத்தரப்பிரதேசம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டிய டாக்டர் மாண்டவியா, ஒருங்கிணைந்த சுகாதாரக் கொள்கையை நோக்கிப் பாடுபடுவதன் மூலம் இந்தியா தனது சுகாதார சேவைகளை கணிசமாக வலுப்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் தேசத்திற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே சேவை செய்ய முடியும் என்றும் கூறினார். 'இந்தியாவின் மூலம் குணமடையுங்கள்' மற்றும் 'இந்தியாவில் குணமடையுங்கள்' ஆகிய முயற்சிகளைப் பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், "உலகம் முழுவதும் இருந்து சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார்.

ஒருங்கிணைந்த மருத்துவத்திற்காக மத்திய சுகாதாரத்துறை வழங்கிய ஒத்துழைப்புக்கு மத்திய அமைச்சர் மாண்டவியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய ஆயுஷ் அமைச்சர், “ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஆயுஷ் வசதிகளை சேர்ப்பதற்கான ஆதரவை தேசிய ஆயுஷ் இயக்கம் மாநிலங்களுக்கு வழங்குவதாகக் கூறினார்.

மக்கள் ஆயுஷ் சேவைகளை எளிதாகப் பெற நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆயுஷ் மருந்தகங்கள், ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

******

 

AD/CR/KRS


(Release ID: 1925295) Visitor Counter : 159