பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

85-வது தேசிய மாணவர் படையினருக்கான  மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத்துறைஇணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 17 MAY 2023 6:27PM by PIB Chennai

இளைஞர்கள் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வலுவான நோக்கத்தையும், ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் இன்று தொடங்கி வைத்தார். புதுதில்லியில் 85-வது தேசிய மாணவர் படையினர்  மலையேறுதல் 2023 பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

நாட்டின் வளர்ச்சியில் என்சிசியின் பங்கைப் பாராட்டிய மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர், என்சிசியால் மாணவர்களிடையே புகுத்தப்படும்  தனிமனித ஒழுக்கம், தலைமைப் பண்பு, தோழமை மற்றும் சாகசம் ஆகிய குணங்கள் அவர்களை வாழ்வின் பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தும் எனக் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள யூனும் மலைக்குச் செல்லும் என்சிசி மலையேற்றப் பயணக் குழுவில் 4 அதிகாரிகள், 10 பணியாளர்கள் மற்றும் 18 என்சிசி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் பெண்கள். இது 1970-ம் ஆண்டு முதல் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது 85-வது பயணமாகும்.

******

AP/CR/MA/KRS


(रिलीज़ आईडी: 1924973) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी