அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஒரு நூற்றாண்டுக்கு முன் கண்டறியப்பட்டவிண்மீனின் மையப்பகுதி அதிக உமிழ்வை எட்டியதைக் கண்டறிந்த 11 சர்வதேச தொலைநோக்கிகள்
Posted On:
17 MAY 2023 4:54PM by PIB Chennai
பூமியில் இருந்து சுமார் 950 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பிஎல் லெசர்ட்டே எனப்படும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட விண்மீனின் மையப்பகுதி அதன் அதிகபட்ச கதிர்வீச்சை எட்டியுள்ளது. ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முதுநிலை ஆராய்ச்சி மாணவியான அதிதி அகர்வால் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், பிஎல் லெசர்ட்டேவில் இருந்து வெளிவந்த ஒளிப்பிழம்பு 202 ஆகஸ்ட் 21 அன்று உச்சத்தை எட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அமைந்துள்ள பதினொரு தொலைநோக்கிகளின் தொடர்ச்சியான கண்காணிப்புகளின் மூலம் பிஎல் லெசர்ட்டேவின் உமிழ்வு கண்டறியப்பட்டது. அவற்றில் ஒன்று லடாக்கின் ஹன்லேயில் அமைந்துள்ள இமயமலை சந்திரா தொலைநோக்கி.
2020 ஜூலை மாதத் தொடக்கத்தில் உமிழத் தொடங்கிய பிஎல் லெசர்ட்டே, 2020 ஜூலை 13 முதல் 2020 செப்டம்பர் 14 வரை 84 நாட்களுக்கு தொடர்ந்ததாகவும், முதன்முறையாக 2020 ஆகஸ்ட் 21-ம் தேதியன்று பிரகாசம் உச்சத்தை எட்டியதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலந்தின் க்ராகோவில் அமைந்துள்ள டால்-கிர்காம் தொலைநோக்கி மூலம் நன்கு படம்பிடிக்கப்பட்டது.
ஆய்வுக் கட்டுரையை முழுமையாகக் காண; https://arxiv.org/abs/2302.10177
(Release ID : 1924822)
AP/CR/KRS
******
(Release ID: 1924955)
Visitor Counter : 186