வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலக வர்த்தக நிறுவனத்தின் சீர்திருத்தங்களில் இணைந்து பணியாற்ற இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுதியேற்பு
प्रविष्टि तिथि:
16 MAY 2023 12:11PM by PIB Chennai
அனைத்து விஷயங்களிலும் ஒன்றிணைந்து, நடைபெற்று வரும் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை விரைவுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஐரோப்பிய வர்த்தக ஆணையர் திரு வால்டிஸ் டாம்ப்ரோவ்ஸ்கிஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சகங்கள் அளவிலான கூட்டத்திற்கு இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த விஷயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள நீண்ட கால கூட்டணியை நினைவுகூர்ந்த தலைவர்கள், ஜனநாயகம் மற்றும் விதிகளின் அடிப்படையிலான சர்வதேச அமைப்புமுறையில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சர்ச்சைகளைத் தீர்க்கும் அமைப்புமுறை, வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைக்கான மானியங்கள், மின்னணு வர்த்தக சட்டவரைவை மற்றும் உள்நாட்டு சட்டங்கள் உள்ளிட்ட உலக வர்த்தக நிறுவனத்தின் பொதுவான சீர்திருத்தங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கவும் இரு நாடுகளும் இசைவு தெரிவித்தன. வரவிருக்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் அமைச்சகங்கள் அளவிலான உச்சிமாநாட்டில் ஆக்கபூர்வமான தீர்வுகள் எழுவதற்கு தங்களது கூட்டுமுயற்சி உறுதுணையாக இருக்கும் என்ற தங்களது நம்பிக்கையை தலைவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இருதரப்பு பேச்சு வார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற பணிக்குழுக் கூட்டத்திற்கு திரு பியூஷ் கோயலும், திரு வால்டிஸ் டாம்ப்ரோவ்ஸ்கிஸ்சும் தலைமை வகித்தார்கள். வர்த்தகம், முதலீடு மற்றும் நெகிழ்தன்மைமிக்க விநியோக சங்கிலிகள் குறித்த இந்த பணிக்குழுக் கூட்டத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924405
(Release ID: 1924405)
******
AP/RB/KRS
(रिलीज़ आईडी: 1924538)
आगंतुक पटल : 239