சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஜப்பானிய மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடினார்
Posted On:
15 MAY 2023 4:37PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜப்பானிய மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான் மருந்து உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, இந்தியா சர்வதேச மருந்து உற்பத்தி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கொரோனாத் தொற்றுக்கு எதிரானப் போரில், இந்தியா சுமார் 185 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சந்தையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். துல்லியமான மருத்துவம், செல் மற்றும் மரபணு சிகிச்சை, உயிரியல் தயாரிப்புகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு போன்றவற்றில் இணைந்து செயல்பட வேண்டுமென ஜப்பானிய நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்தார். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இத்தகைய ஒத்துழைப்பின் மூலம் நவீன சிகிச்சைகள் உள்நாட்டிலேயே கிடைப்பதோடு மலிவான விலையில் கிடைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
******
AP/CR/KPG
(Release ID: 1924274)
Visitor Counter : 169