புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஜி20 3வது எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டத்திற்கிடையே, 'புதிய மற்றும் வளர்ந்து வரும் எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான குறைந்த செலவு நிதி' நிகழ்வுக்குப் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 14 MAY 2023 4:34PM by PIB Chennai

ஜி20 3வது எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டத்திற்கிடையே, 'புதிய மற்றும் வளர்ந்து வரும் எரிசக்தி  தொழில்நுட்பங்களுக்கான குறைந்த செலவு  நிதி' நிகழ்வுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் நாளை (15.05. 2023) ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில், ஜியோ உலக மாநாட்டு மையத்தில், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன், அறிவுப் பங்காளியான  சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் கொள்கை வகுப்போர், தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மேம்பாட்டு வங்கிகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களின் தீவிர பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைட்ரஜன், கடல் காற்று, எரிசக்தி  சேமிப்பு மற்றும் கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு  ஆகிய வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்களின் எதிர்காலப் பாதையின் அடிப்படையில் எரிசக்தி  மாற்றத்திற்கான குறைந்த செலவு நிதியுதவியின் மதிப்பீட்டில் அமர்வுகள் கவனம் செலுத்தும்.

ஜி 20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து சர்வதேச புதுப்பிக்கவல்ல எரிசக்திமுகமை தயாரித்த "எரிசக்தி மாற்றத்திற்கான குறைந்த செலவு  நிதி" அறிக்கையும்  ஜி20  எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டத்திற்கிடையே வெளியிடப்படும். G20 நாடுகளிலும் அதற்கு அப்பாலும் குறைந்த செலவில்  மூலதனம் கிடைப்பதை அதிகரிக்க இந்த அறிக்கை ஒரு விரிவான தகவல் தொகுப்பை  வழங்குகிறது.

***

AD/SMB/DL



(Release ID: 1924055) Visitor Counter : 151


Read this release in: English , Urdu , Hindi , Telugu