சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜி7 சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Posted On:
14 MAY 2023 2:20PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று ஜப்பானின் நாகசாகியில் சுகாதார கண்டுபிடிப்புகள் குறித்த ஜி7 அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அனைவருக்கும் சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் சுகாதாரம் போன்ற சுகாதார கண்டுபிடிப்புகளின் முன்னுரிமைகள், செயல்படுத்தல் மற்றும் பயன்பாடு குறித்து விவாதிக்க கூட்டம் நடைபெற்றது. ஜி7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய அழைப்பாளர் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, “தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சுகாதார உபகரணங்களின் பயன்பாடு, பலப்படுத்தப்பட்ட சுகாதார சேவை வழங்கலை எளிதாக்குவதுடன், அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கலை செயல்படுத்த உதவும். பெருந்தொற்று , சுகாதார சேவை வழங்கலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் டிஜிட்டல் பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியது’’ என்று கூறினார்.
டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், “இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி விநியோக தளமான கோ-வின் நாடு முழுவதும் 2.2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் பதிவு செய்துள்ளது. இதேபோல், தொற்று பரவலின் போது தொடங்கப்பட்ட தேசிய தொலை மருத்துவ தளமான இசஞ்சீவனி, ஏற்கனவே 115 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஒருங்கிணைத்து, இலவசமாக குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, உலகின் மிகப்பெரிய தொலைமருத்துவ தளமாக மாற்றியுள்ளது", என்றார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் டிஜிட்டல் ஆரோக்கியத்தை ஒரு குறிப்பிட்ட முன்னுரிமையாகக் கொண்டு வந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் உள்ள டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான உலகளாவிய முன்முயற்சியை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து டிஜிட்டல் முயற்சிகளின் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது என்றும் டாக்டர் மாண்டவியா கூறினார்.
***
AD/PKV/DL
(Release ID: 1924028)
Visitor Counter : 169