சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கத்துறையில் உள்ள தொழில்நுட்ப சவாலை எதிர்கொள்ள ஸ்டார்டப் மற்றும் தொழில்துறைகள் உதவ முடியும் - சுரங்கத்துறை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2023 4:32PM by PIB Chennai

சுரங்கத்துறையின் ஸ்டார்டப் மாநாட்டின் இலச்சினையை சுரங்கத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுரங்கத்துறை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், நாட்டில் சுரங்கத்துறையில் உள்ள தொழில்நுட்ப சவாலை எதிர்கொள்ள ஸ்டார்டப் மற்றும் தொழில்துறைகள் உதவ முடியும் என்று தெரிவித்தார். அதே போல் சுரங்கத்துறையின் வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலையும் அது தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.

இந்நோக்கங்களை அடையும் வகையில் சுரங்கத்துறை அமைச்சகம் முதலாவது சுரங்க ஸ்டார்டப் மாநாட்டை மும்பை ஐஐடியுடன் இணைந்து 2023, மே 29 அன்று நடத்தவுள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட ஸ்டார்டப் நிறுவனங்கள், 20 பெரிய தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக திரு பரத்வாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

***

SRI/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1923423) வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu