வெளியுறவுத்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்: மூன்றாவது மேம்பாட்டுப் பணிக்குழுக்கூட்டம்
Posted On:
08 MAY 2023 5:50PM by PIB Chennai
ஜி20-ன் முன்னுரிமை பகுதிகளில் ஒன்றான பெண்கள் தலைமையில் மேம்பாடு குறித்த நிகழ்வு மூன்றாவது மேம்பாட்டுப் பணிக்குழுக்கூட்டத்தின் முதல் நாளில் சிந்தனைக்குரியதாக இருந்தது. வெளிநாட்டு ஆய்வு அறக்கட்டளை பங்களிப்புடன், ஜி20 தலைமை செயலகத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்வில், வெளிநாட்டு ஆய்வு அறக்கட்டளையின் தலைவர் திரு சமீர் சரண் முக்கிய உரை நிகழ்த்தினார். மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதன் அவசியம் பற்றி பேசிய அவர், வரும் பத்தாண்டுகளில் பெண்களில் இருந்து புதிய தலைமை உருவாக வேண்டும் என்றார். மாற்றத்தை ஏற்படுத்துகின்றவர்களாகவும், முடிவெடுப்பவர்களில் முதன்மையானவர்களாகவும் பெண்கள் இருப்பதற்கான சூழலை உருவாக்க கூட்டாக சிந்திப்பது இந்த நிகழ்வின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், வரவேற்புரையாற்றிய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் திரு நாகராஜ் நாயுடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அணுகுமுறை மூலம் பெண்களின் முழுமையான ஆற்றலை வெளிகொண்டு வரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் நாஸ்கான் தலைவர் திரு தேவ்ஜானி கோஷ், ஆசிய வளர்ச்சி வங்கியின் பாலின சமத்துவ மையப்பொருள் குழுவின் தலைவர் திருமதி சமந்தாஹங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நிறைவுரையாற்றிய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் திரு ஈனாம் கம்பீர், அமைப்புசார் வெற்றிக்கு முக்கியமான நீண்டகால முதலீடாக பெண் தலைவர்களின் திறனை அதிகரிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார். ஐநா சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் உட்பட சர்வதேச கட்டமைப்புகள் பலவும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.
AP/SMB/RS/KPG
***
(Release ID: 1922593)
Visitor Counter : 199