ஜல்சக்தி அமைச்சகம்

உலகளாவிய நதி-நகரங்கள் கூட்டணி குறித்த கருத்தரங்குக்கு தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு

Posted On: 04 MAY 2023 5:18PM by PIB Chennai

தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்துடன்  இணைந்து தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம்  இன்று புது தில்லியில் நதி-நகரங்கள் கூட்டணி என்ற உலகளாவிய கருத்தரங்குக்கு  ஏற்பாடு செய்தது. உறுப்பு நகரங்களின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு நகர்ப்புற நதிகளை நிர்வகிப்பதற்கான நல்ல நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குவது இந்தக்  கருத்தரங்கின் நோக்கமாகும்.

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட  நிதியளிப்பு நிறுவனங்களும் கலந்துரையாடலில் பங்கேற்றன.

கருத்தரங்கில் உரையாற்றிய தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு. ஜி. அசோக் குமார், கூட்டணியில்  சேரும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும், என்எம்சிஜி இந்த பிரச்சினையில் அபரிமிதமான ஆர்வத்தை உருவாக்கியது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கங்கை ஆற்றின் கரையில் உள்ள 30 நகரங்களுடன் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டதாகவும், இறுதியில் கங்கைப் படுகையில் மட்டும் இல்லாமல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  “நகரமயமாக்கலுடன், கழிவுநீரை அகற்றுவதில் நாம் அக்கறை கொள்ளாவிட்டால் அது பெரும் அச்சுறுத்தலாகும். உள்கட்டமைப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் நகர்ப்புற திட்டமிடுபவர்கள் ஆறுகள் மற்றும் பிற குடிநீர் ஆதாரங்களை சுத்தமாக வைத்திருக்க இதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

 

----

AD/PKV/KPG



(Release ID: 1922030) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi , Telugu