அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் பொருட்களில் தெர்மோ எலக்ட்ரிக் செயல்திறனை மேம்படுத்த மெட்டாவலன்ட் இரசாயனப் பிணைப்பு முக்கியமானது

Posted On: 03 MAY 2023 12:50PM by PIB Chennai

திடப்பொருளில் உள்ள புதிய வகை ரசாயனப் பிணைப்பான மெட்டாவலண்ட் பிணைப்பு, குவாண்டம் பொருட்களில் உள்ள தெர்மோ எலக்ட்ரிக் செயல்திறனைப் பொருத்தவும், கழிவு வெப்பத்தை மின்சாரமாக மாற்றவும் பயன்படுத்தப்படலாம். இது நாட்டின் புதிதாக தொடங்கப்பட்ட குவாண்டம் இயக்கத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.

கழிவு வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பசுமை ஆற்றல் உற்பத்திக்கான வாய்ப்பாகும். இந்த சவாலான இலக்கை நனவாக்க, பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவரான ஐவி மரியா ஆய்வு மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு உலோகங்கள், கண்ணாடிகள் ஆகியவற்றுக்கு இடையே கோரும் இரசாயனப் பிணைப்பு தேவைப்பட்டது. மெட்டாவலன்ட் பிணைப்பு எனப்படும் தனிப்பட்ட பிணைப்பு இதனை நிறைவேற்றுகிறது.

சிறந்த மின் பண்புகளைக் கொண்ட பொருட்களுக்கான அவர்களின் தேடலானது, டோபோலாஜிக்கல் இன்சுலேட்டர்கள் போன்ற குவாண்டம் பொருட்களை நோக்கி அவர்களை ஈர்த்தது. அந்த வகையில் TlBiSe2 உண்மையில் மெட்டாவலண்ட் பிணைப்பை கொண்டுள்ளது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

குவாண்டம் பொருட்களில் தெர்மோ எலக்ட்ரிக் செயல்திறனை மேம்படுத்த புதுமையான வேதியியல் பிணைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்தும், இந்தியாவின் குவாண்டம் மிஷன் செயல்படும் குவாண்டம் பொருட்களில் வெளிப்படும் பண்புகளை எவ்வாறு உணர முடியும் என்பதற்கான அடிப்படை தரவுகளை அவர்களின் ஆய்வு வழங்குகிறது. இந்த ஆய்வு சமீபத்தில் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியில் (JACS) வெளியிடப்பட்டது.

                                                      ----

AD/CR/KPG



(Release ID: 1921772) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi