பாதுகாப்பு அமைச்சகம்
35-வது கடற்படை உயர் கமாண்ட் படிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சி
Posted On:
03 MAY 2023 3:15PM by PIB Chennai
35-வது கடற்படை உயர் கமாண்ட் படிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சி கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் 3, மே 2023 அன்று நடைபெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படிப்புபை இந்திய கடற்படையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த தலா 4 அதிகாரிகள் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் பயிற்சியை நிறைவு செய்தனர். தேசிய பாதுகாப்பு, கடல்சார் உத்தி, கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் கூடிய தலைமைத்துவத்தை அதிகாரிகளுக்கு அளிப்பதை இந்தப் படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது. ஆயுதப்படையினர் மற்றும் நாட்டிற்கான முக்கிய செயல் நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சிப்பணிகளில் இப்படிப்பின் போது அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவா ஆளுநர் திரு ஸ்ரீதரன் பிள்ளை கலந்துகொண்டார்.
***
AD/IR/AG/KPG
(Release ID: 1921709)
Visitor Counter : 172