அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் திறன்மிகு முப்பரிமாண அச்சு ஜெல் அடிப்படையிலான படலம் கண்டுபிடிப்பு

Posted On: 03 MAY 2023 9:23AM by PIB Chennai

நரம்புகளில் ஏற்படும் பாதிப்பை விரைவில் குணப்படுத்தவும் சவாலான அறுவை சிகிச்சைகளில் உதவும் வகையிலுமான புதிய முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் திறன்மிகு ஜெல் அடிப்படையிலான படலம் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது நரம்பு குழாயாக தானாகவே மாறக்கூடிய தன்மையை இது பெற்றுள்ளது.

பாலிமர் அடிப்படையிலான குழாய்கள் தான் தற்போது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் திறன்மிகு ஜெல் அடிப்படையிலான படலத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட பகுதியின் மாதிரி காணொளி வாயிலாக மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து முப்பரிமாண அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. இது போன்ற தொழில்நுட்பம், நான்கு பரிமாண அச்சு என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் கௌசிக் சட்டர்ஜி தலைமையிலான குழு இத்தகைய ஜெல் படலத்தை  சமீபத்தில் ஆய்வு செய்தது. அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர் மெட்டீரியல்ஸ் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

                                                                                                                         -------

AP/BR/KPG


(Release ID: 1921593) Visitor Counter : 192


Read this release in: Urdu , English , Hindi , Telugu