சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2016-ம் ஆண்டுக்குப் பிந்தைய 7 ஆண்டுகளில் இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில் தில்லியில் அதிக அளவில் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்தது

प्रविष्टि तिथि: 30 APR 2023 6:04PM by PIB Chennai

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுத் தரக் குறியீட்டுத் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தில்லியில் காற்றின் தரம் “சிறந்தது” முதல் “மிதமான'து என்ற அளவில் அதிக நாட்கள் இருந்துள்ளது. 2016 முதல் கடந்த 7 ஆண்டுகளில் கோவிட் கால ஊரடங்கு காலத்தைத் தவிர பிற காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த நான்கு மாத காலப்பகுதியில் தான் அதிக நாட்கள் நல்ல நிலையில் காற்றின் தரக் குறியீடு இருந்துள்ளது.

 

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 2016-ம் ஆண்டில் 8 நாட்களும், 2017-ம் ஆண்டில் 29 நாட்களும் 2018-ம் ஆண்டில் 32 நாட்களும் 2019-ம் ஆண்டில் 44 நாட்களும், 2020-ம் ஆண்டில் 68 நாட்களும், 2021-ம் ஆண்டில் 31 நாட்களும், 2022-ம் ஆண்டில் 27 நாட்களும் காற்றின் தரம் “சிறப்பு” அல்லது “மிதமானது” என்ற நிலையில் இருந்துள்ளது. இதில் 2020-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது, நடப்பு 2023-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 52 நாட்கள் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்துள்ளது.

 

கோவிட் பாதிப்புக் காலத்தைத் தவிர கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2023-ம் ஆண்டில் இதுவரை தில்லியில் மிகக்  குறைந்த நாட்களே ‘மோசமானது முதல் மிக மோசமானது’ என்ற தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

 

தொடர்ச்சியான கள செயல்பாடுகள் மற்றும் குறுகிய, நடுத்தர, நீண்ட காலத்திற்கான இலக்குகள் ஆகியவை காற்றின் காற்றின் தரத்தில் படிப்படியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

AP/PLM/DL


(रिलीज़ आईडी: 1920974) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी