அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு £ 400,000 மதிப்பிலான உதவித்தொகையை அக்கல்லூரி அறிவித்துள்ளது.


கல்லூரி மாணவர்களுடன் உரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் இளைஞர்களுக்கு இது சிறந்த தருணம். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் பல தடைகளை நீக்கி இளைஞர்களின் விருப்பங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளார் என்று கூறினார்

Posted On: 29 APR 2023 2:17PM by PIB Chennai

அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளுக்கான மத்திய இணையமைச்சர் (தனி பொறுப்பு), டாக்டர் ஜிதேந்திர சிங்  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பயிலும்  இந்திய மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இளைஞர்களை மையமாகக் கொண்ட கொள்கைகளின் காரணமாக இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது சிறந்த தருணமாக உள்ளது என்று அமைச்சர்  கூறினார்.

அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய மாணவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் உற்சாகமாக உரையாடினார். இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தற்போதைய காலம் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் பல இடையூறுகளை நீக்கியுள்ளார். இதனால் இளைஞர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

          விண்வெளித் துறை தனியார் பங்கேற்பாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதை அமைச்சர் எடுத்துக்காட்டினார். இப்போது விண்வெளித் துறையில் கூட நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. ஸ்டார்ட்அப் இயக்கத்திற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஊக்கம் அளித்துள்ளார். இதன் விளைவாக 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் இந்த எண்ணிக்கை 350ல் இருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

            முன்னர் புறக்கணிக்கப்பட்ட உயிரி தொழில்நுட்பத் துறையும் தற்போதைய அரசால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றிக்குப் பிறகு மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் கூறினார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், லண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு வருகை தந்த நேரத்தில், கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 400,000 யூரோ உதவித்தொகையை அறிவித்துள்ளது. அதில் 50% உதவித்தொகை இந்தியாவிலிருந்து வரும் மாணவிகளுக்கு வழங்கப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இம்பீரியல் கல்வியாளர்கள் 300க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் இணைந்து 1,200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். கல்லூரியில் தற்போது 700 இந்திய மாணவர்கள் உள்ளனர்.

***

AP/CJL/DL


(Release ID: 1920752) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Marathi