அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மின்னணு தொடர்பான பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

प्रविष्टि तिथि: 28 APR 2023 5:43PM by PIB Chennai

மின்னணு தொடர்பான பொருளாதாரத்தில் உலகளவில்  இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் சென்ற அவர், அங்குள்ள செமிகண்டக்டர் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

 அங்குள்ள வசதிகளை பார்வையிடுவதற்காக தம்மை அழைத்தமைக்கு பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவதாக கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய மின்னணு அமைப்பில்  இந்தியா முக்கிய நாடாக விரைவாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இங்கிலாந்தில் உள்ள மின்னணு தொழில் துறை மற்றும் கல்வி நிலையங்களுடன்  இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

-----

AD/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1920611) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी