அணுசக்தி அமைச்சகம்

பிரிட்டனின் ருதர்ஃபோர்டு ஆப்பிள்டன் முன்னணி ஆய்வகவசதியை அதிகரிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க உள்ளது

Posted On: 28 APR 2023 2:19PM by PIB Chennai

பிரிட்டனின் ருதர்ஃபோர்டு ஆப்பிள்டன் முன்னணி ஆய்வகத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு, ஒய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பார்வையிட்டார். அங்கு ஆராய்ச்சியாளர்களை அவர் சந்தித்தார்.

பிரிட்டனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகங்களில் ருதர்ஃபோர்டு ஆப்பிள்டன் ஆய்வகமும் ஒன்றாகும். பிரிட்டனுக்கான ஆராய்ச்சி வசதிகளுடன் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்தும் இந்த ஆய்வகம் செயல்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற பொருள் தரும் வகையில் வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளை பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்துள்ளதாக கூறினார். இந்தத் தத்துவத்துடன், மனிதகுலத்தின் நலனுக்காக, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறையில் இங்கிலாந்து நீண்ட காலமாக இந்தியாவுடன் ஒத்துழைப்பு வழங்கி பாரம்பரிய பங்குதாரராக திகழ்கிறது என்று அவர் கூறினார்.

ருதர்ஃபோர்டு ஆப்பிள்டன் ஆய்வகத்தின் பணிகளைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், நானோ இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தி ஆராய்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

ரூ.2,600 கோடியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புவியீர்ப்பு அலை தொடர்பான லிகோ – இந்தியா நவீன திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் பிரிட்டனில் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

*****


AD/PKV/RR/KRS



(Release ID: 1920511) Visitor Counter : 116


Read this release in: English , Urdu , Hindi , Telugu