பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை
प्रविष्टि तिथि:
27 APR 2023 7:12PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே ஏப்ரல் 27, 2023 அன்று கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ரஸ்லன் சசைலைக்கோவ் மற்றும் தஜிகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ஷெரலி மிர்சோவுடன் தனித்தனியே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பரம் இருதரப்பு நலன் சார்ந்த கூட்டாண்மையை விரிவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 28, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் விடுத்த அழைபின் பேரில், இரு நாட்டு அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர்.
***
AD/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 1920331)
आगंतुक पटल : 177