பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தளபதிகள் உச்சிமாநாடு

Posted On: 27 APR 2023 10:53AM by PIB Chennai

ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெற்ற ராணுவத் தளபதிகள் உச்சிமாநாட்டில் கேந்திர, பயிற்சி, மனிதவள மேம்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பரதரப்பட்ட விஷயங்கள் குறித்தும், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ராணுவத்தை வடிவமைக்கும் முக்கிய முடிவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. காணொலிக் காட்சி வாயிலாகவும், நேரடியாகவும் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெற்றது.

தற்போதைய மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்பு சூழல்கள் குறித்தும், இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்தும் ராணுவத் தளபதிகளும், மூத்த நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட “மாற்றத்திற்கான ஆண்டு” என்பதன் ஒரு பகுதியாக நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் இடையீடு, மனித வள மேம்பாடு, கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அக்னிபத் திட்டத்தை திறம்பட அமல்படுத்தும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. படைவீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களையும், முன்முயற்சிகளையும்  அறிமுகப்படுத்த கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. நவீன தகவல் தொடர்பு அமைப்புமுறையின் மீது சார்பு அதிகரித்திருக்கும் வேளையில், பாதுகாப்பான இணைப்புகளை உறுதி செய்வதற்கான சைபர் நிர்வாக பிரிவை விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1920110

***

 (Release ID: 1920110)

AD/RB/RK



(Release ID: 1920153) Visitor Counter : 128