மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜி20-ன் கீழ் மூன்றாவது கல்வி பணிக்குழுக் கூட்டம் புவனேஸ்வரில் தொடங்கியது
Posted On:
26 APR 2023 5:49PM by PIB Chennai
ஜி20இன் கீழ், மூன்றாவது கல்வி பணிக்குழுக் கூட்டம் இன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ‘பணியின் எதிர்கால சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை உருவாக்குதல்' என்ற கருத்தரங்கு தொடங்கியது. இதில் கல்வித் துறையை உலகளவில் மாற்றுவதற்கான புதுமையான ஆலோசனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக சென்னை மற்றும் அமிர்தசரஸில் நடைபெற்ற இரண்டு பணிக்குழுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக இப்பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்பு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றள்ளனர்.
இக்கூட்டத்தின் முதல் நாளில் மாநில கல்வி அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். திறன் கல்வியின் மதிப்பை அவர் வலியுறுத்தி பேசினார். எதிர்கால ராணுவத்தை உருவாக்கும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் திறன் முன்னேடுப்புகள் குறித்து அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் கூட்டுச் சீர்திருத்தங்களை பயனுள்ளதாக்குவதில் நிபுணர்கள், அனுபவங்கள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதில் ஜி20 போன்ற அமைப்புகளின் அவசியம் குறித்து அவர் எடுத்துக்கூறினார்.
இப்பணிக்குழுக் கூட்டத்தில் 3 குழு விவாதங்கள் நடைபெறுகின்றன. பிரேசில், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், யுனிஃசெப் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
***
AD/IR/RS/RJ
(Release ID: 1920036)
Visitor Counter : 167