நிதி அமைச்சகம்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ஆய்வுக்கூட்டத்திற்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்
Posted On:
25 APR 2023 5:50PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று (25.04.2023) நடைபெற்றது. இதில் மத்திய வருவாய்த்துறை செயலாளர், நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மற்றும் அந்த வாரியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள், நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை வழக்குகள் உள்ளிட்டவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
வரி செலுத்துவோரின் விண்ணப்பங்களை பரிசீலித்து குறித்த காலத்தில் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதற்கான பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
***
SM/PLM/RS/KRS
(Release ID: 1919583)