குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
21 APR 2023 3:41PM by PIB Chennai
ரம்ஜான் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி மிகுந்த தருணமான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலான் மாதத்தின் முடிவில் வரும் ரம்ஜான் பண்டிகை ஒருங்கிணைந்து கொண்டாடுவதற்கும் ஒருவரோடு ஒருவர் நமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவான மிகச்சிறந்த நிகழ்வு என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியும், நன்றியறிதலும் நிறைந்த நன்னாளாக கருதப்படும் இந்த நாளில் கருணை, பரோபகாரம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் இதயமாக இந்தப் பண்டிகை திகழ்கிறது. ஒருங்கிணைப்பின் பாலமாக தொடர்வதோடு மனித சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக நம்மை நாமே மறு அர்ப்பணிப்பு செய்து கொள்வோம் என்று அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
***
SM/RJ/RR
(Release ID: 1918570)