குடியரசுத் தலைவர் செயலகம்
மஷோப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை ஏப்ரல் 23 பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் இன்றைய நிகழ்வில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
20 APR 2023 6:55PM by PIB Chennai
இமாச்சலப்பிரதேசம் மஷோப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையைப் பொதுமக்கள் பார்வையிட திறந்துவிடும் நிகழ்வில் இன்று (ஏப்ரல்20,2023) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
முன்னதாக சிம்லாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் நிறுவிய மேம்பட்ட ஆய்வுக்கான இந்திய கல்விக்கழகத்தைக் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். இந்த மாளிகை 2023 ஏப்ரல் 23-ல் இருந்து பார்வையாளர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் பார்வையிட திறந்துவிடப்படும்.
இந்தப் பயணத்தின் போது பார்வையாளர்கள் கட்டடத்திற்கு உள்ளிருந்து 173 ஆண்டு பாரம்பரியம் மிக்க கட்டடத்தின் காட்சிகளைக் காணமுடியும். பார்வையாளர்கள் இந்த மாளிகையின் புல்வெளியிலும், தாழ்வாரங்களிலும் நடக்கலாம். பார்வையாளர்களுக்கு பொருட்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலி, உணவருந்தும் இடம், புத்தகக்கடை, ஓய்வறைகள், முதலுதவி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. https://visit.rashtrapatibhavan.gov.in/. என்ற இணையதளத்தில் பார்வையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
***
(Release ID: 1918356)
AP/SMB/AG/KRS
(Release ID: 1918380)
Visitor Counter : 160