பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனடாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சருடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்

प्रविष्टि तिथि: 19 APR 2023 7:08PM by PIB Chennai

கனடாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் திருமதி அனிதா ஆனந்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 ஏப்ரல் 19 அன்று தொலைபேசியில் உரையாடினார்.  இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

இந்தியா பசிபிக் கடல்பகுதியில் கனடாவின் கப்பற்படை இருப்பது அதிகரித்துள்ளதை திரு ராஜ்நாத் சிங் வரவேற்றார். ஐநா அமைதிப்படை பயிற்சி முதல், பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு வரையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

இந்த உரையாடலின் போது இந்தியாவில் முதலீடு செய்ய கனடாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு
திரு ராஜ்நாத் சிங்
அழைப்பு விடுத்தார்.

 

***

AP/SMB/AG/KRS


(रिलीज़ आईडी: 1918045) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu