பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவக் கமாண்டர்கள் மாநாட்டின் போது இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 19 APR 2023 4:01PM by PIB Chennai

இந்திய ராணுவக் கமாண்டர்கள் மாநாட்டின் 3-வது நாளான இன்று உயர்நிலைத் தலைவர்களிடையே  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இதற்கு முன்பாக “தேசக்கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு” என்பது பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

 நாட்டின் மிகவும் நம்பகமான உத்வேகம் அளிக்கின்ற அமைப்பாக லட்சக்கணக்கான குடிமக்களுக்கு இந்திய ராணுவம் விளங்குகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்திய கட்டமைப்பிலும் ஒட்டுமொத்த தேச வளர்ச்சியிலும் ராணுவத்தின் பங்கு மிகமுக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.    

  இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்படுவதையும், நிரந்தர ஆணையத்திற்கு அனுமதி அளித்து தேசத்தின் தொலைநோக்குப் பார்வையான மகளிருக்கு அதிகாரமளித்தல்  என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது இந்திய ராணுவம் குறித்து ஐநா இதழ் ஒன்றையும், ராணுவத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் தபால் தலை ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.

முன்னதாக 2023-ம் ஆண்டின் ராணுவக் கமாண்டர்களின் முதலாவது மாநாடு இணையவழியாக ஏப்ரல் 17 அன்று தொடங்கியது. இந்த மாநாட்டின் போது தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்புத் தன்மை, தற்போதைய பாதுகாப்பு சாதனைகளின் சவால்கள் போன்றவை குறித்து இந்திய ராணுவத்தின் உயர்நிலை தலைவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

***

AP/SMB/AG/KRS

 


(Release ID: 1918026)
Read this release in: English , Urdu , Hindi , Marathi