கலாசாரத்துறை அமைச்சகம்
‘கலாச்சாரம்ஆக்கப்பூர்வ தொழில்கள் மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரத்தை ஊக்குவிப்பது’ குறித்தஉலகளாவிய மையப்பொருள் சார்ந்த இணையவழிக் கருத்தரங்கை ஏப்ரல் 19 அன்று கலாச்சாரப் பணிக்குழுநடத்த உள்ளது
Posted On:
18 APR 2023 5:56PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் கலாச்சாரப் பணிக்குழுவால் நடத்தப்படும் உலகளாவிய மையப் பொருள் சார்ந்த இணையவழிக் கருத்தரங்கத் தொடரின் ஒரு பகுதியாக 2023 ஏப்ரல் 19 அன்று ‘கலாச்சாரம் ஆக்கப்பூர்வ தொழில்கள் மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரத்தை ஊக்குவிப்பது’ குறித்த மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்தக் கருத்தரங்கு கலாச்சாரம் மற்றும் ஆக்கப்பூர்வ தொழில்களில் தற்போதைய போக்குகள், சவால்கள், வாய்ப்புகளை பிரதிபலிக்கும். ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களை இது ஒருங்கிணைக்கும்.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% பங்களிப்பு செய்யும் கலாச்சாரம், ஆக்கப்பூர்வ தொழில்கள், ஆக்கப்பூர்வ பொருளாதாரம் ஆகியவை நமது உலகத் தன்மையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கலாச்சாரம் மற்றும் ஆக்கப்பூர்வ தொழில்கள் துறை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் அதிகபட்ச வேலையை 15-29 வயது பிரிவினருக்கு வழங்குகிறது. எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை இது வலுவாக வெளிப்படுத்துகிறது.
***
AP/SMB/MA/KRS
(Release ID: 1917743)
Visitor Counter : 156