குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவைக் கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்

Posted On: 17 APR 2023 6:52PM by PIB Chennai

இந்தியாவைக் கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் இன்று (ஏப்ரல் 17, 2023) குடியரசுத்தலைவர் திருமதி  திரௌபதி முர்முவை சந்தித்தனர்

இந்த சந்திப்பின் போது பேசிய குடியரசுத்தலைவர், பள்ளி மாணவர்களுக்கான இந்தியாவைக் கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது சமூக பிரச்சினைகள் குறித்த தலைப்பில், தங்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தி எழுத இளைஞர்களுக்கு இந்த தளத்தை ஏற்படுத்தித் தந்த  ஏற்பாட்டாளர்களையும்  அவர் பாராட்டினார். இளைஞர்களின் கற்பனையைத் தூண்டி தேசக்கட்டுமான உணர்வையும் பெருமித உணர்வையும் இளைஞர்களிடம் பதிய வைக்க இது நல்ல முன்முயற்சி என்று அவர் கூறினார்.

‘மகத்தான இந்தியாவை கட்டமைக்க நான் செய்ய வேண்டிய ஐந்து விசயங்கள்’ என்ற கட்டுரைப் போட்டியின் தலைப்பு   அமிர்த காலத்தில் மிகவும் பொருத்தமானதாகும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியா தனது சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, இந்த இளம் மனங்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். சிறார்கள், பெரிதாக கனவு காணவேண்டும் என்றும் தங்களின் கனவுகளை நனவாக்க கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  அனைத்து சிறார்களும்  அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே தமது செய்தி என்று அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 1917400)
 

AP/SMB/KPG/KRS


(Release ID: 1917438) Visitor Counter : 181
Read this release in: English , Urdu , Hindi , Punjabi