குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் ஏப்ரல் 18 முதல் 21 வரை ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2023 6:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏப்ரல் 18 முதல் 21, 2023 வரை ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர், மஷோப்ராவில் தங்க உள்ளார்.

ஏப்ரல் 18 அன்று, மஷோப்ராவில் துலிப் தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உள்ளார். அன்று மாலை சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் ஹிமாச்சலப்பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

ஏப்ரல் 19 அன்று சிம்லாவில் உள்ள தேசிய தணிக்கை மற்றும் கணக்குகள் அகாடமியில் இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவைத்துறை பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் உரையாட உள்ளார். சிம்லாவில் உள்ள ஹிமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் 26-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

***

AP/IR/RJ/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1917433) வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi