சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவாவில் ஜி20 சுகாதாரப் பணிக்குழுவின் 2-வது கூட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
Posted On:
17 APR 2023 1:49PM by PIB Chennai
கோவாவில் ஜி20 சுகாதாரப் பணிக்குழுவின் 2-வது கூட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே பால், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த இதர பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகள், கூட்டமைப்புகள் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய டாக்டர் பாரதி பிரவின் பவார், இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் சீர்திருத்தப்பட்ட பன்முகச் சூழலில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். இது 21-ம் நூற்றாண்டில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பொறுப்புடன் கூடிய, அனைத்தையும் கொண்ட, சமத்துவமிக்க பிரதிநிதித்துவ அமைப்பை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய திரு ஸ்ரீபத் நாயக், கடந்த ஒரு ஆண்டில் 1.4 மில்லியனுக்கு மேற்பட்ட மருத்துவ சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும், இது மருத்துவ சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1917305)
Visitor Counter : 203