வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 2023, மார்ச் மாதத்திற்கான மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு 2011-12)

प्रविष्टि तिथि: 17 APR 2023 12:03PM by PIB Chennai

2023, மார்ச் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும். இது 2023 பிப்ரவரி மாதத்தில் 3.85 சதவீதமாக இருந்தது.  அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாதப் பொருட்கள், கனிம வளங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை வாயு, தாள்கள், தாள் பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததையடுத்து மார்ச் 2023-ல் பணவீக்க விகிதம் குறைந்தது.

ஜனவரி 2023-ல் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.7 ஆகவும், பணவீக்க விகிதம் 4.80% ஆகவும் இருந்தது.  2023, பிப்ரவரி மாதத்தில் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.9% ஆகவும், பணவீக்க விகிதம் 3.85% ஆகவும் இருந்தது. மார்ச் 2023-ல் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.9% ஆகவும் பணவீக்க விகிதம் 1.34% ஆகவும் இருந்தது.

 

***

AD/IR/RJ/KRS


(रिलीज़ आईडी: 1917250) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri