பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத் தளபதிகள் மாநாடு 2023, ஏப்ரல் 17 முதல் நேரடியாகவும் காணொலிக்காட்சி மூலமாகவும் நடைபெறவுள்ளது

Posted On: 15 APR 2023 5:37PM by PIB Chennai

ராணுவத் தளபதிகள் மாநாடு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயர்நிலை  நிகழ்வாகும். இது கருத்தியல் நிலை விவாதங்களுக்கான ஒரு தளமாகும். இது இந்திய ராணுவத்திற்கு முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் முகியமானது. 2023 ஆம் ஆண்டிற்கான முதல் ராணுவத் தளபதிகள் மாநாடு ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. முதன்முறையாக, பாதுகாப்பான தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராணுவத் தளபதிகள் மாநாடு காணொலிக்காட்சி மூலம் நடத்தப்படுகிறது.  இதில் ராணுவத் தளபதிகள் மற்றும்  மூத்த அதிகாரிகள் முதல் நாளில் மெய்நிகர் முறையில் சந்தித்து பின்னர் விரிவான ஆலோசனைகள் தேவைப்படும் பொருள் பற்றி விவாதிக்க நேரடி  சந்திப்புகளுக்காக தில்லி செல்வார்கள்.

மாநாட்டின் முதல் நாளில், பல்வேறு தலைமையகங்களால் வழங்கப்படும் நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் விவாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து  அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டர்-இன்-சீஃப்  மற்றும் ராணுவ தலைமையகத்தின் முதன்மை  அதிகாரிகளின் அமர்வுகள் நடைபெறும். அக்னிபத் திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் முயற்சிகள், போர்க்களப்  பொறியாளர்களின் பணிகள், பணி அம்சங்கள், பட்ஜெட் மேலாண்மை ஆகியவற்றுடன் ‘மாற்றத்திற்கான  ஆண்டு-2023’-ன் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர்  19 ஏப்ரல் 2023 அன்று மாநாட்டில் உரையாற்ற உள்ளார். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்கள் கண்காட்சியையும் அவர் பார்வையிடுவார்.

இந்த மாநாட்டின் போது எதிர்கால இந்திய - சீன உறவுகள் பற்றி, சீனாவுக்கான முன்னாள் தூதர் திரு விஜய் கோகலே உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

****

AD/SMB/DL


(Release ID: 1916958) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Marathi , Hindi