விவசாயத்துறை அமைச்சகம்

சிறுதானியங்கள் மற்றும் பழங்கால தானியங்கள் பற்றிய மகரிஷி முன்முயற்சியை வெளிப்படுத்த வாரணாசியில் ஜி20 விவசாய முன்னோடி விஞ்ஞானிகளின் கூட்டம்(MACS)

Posted On: 14 APR 2023 1:25PM by PIB Chennai

ஏப்ரல் 17-19 தேதிகளில் வாரணாசியில் நடைபெறும் G20 விவசாய முன்னோடி விஞ்ஞானிகளின் கூட்டம்(MACS) பற்றிய டாக்டர் ஹிமான்ஷு பதக், செயலாளர் (DARE) இயக்குநர் ஜெனரல் (ICAR) ஆகியோர் தரும் தகவல்கள்

            “இந்தியாவின் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடித்தளமே விவசாயம் தான். இந்திய விவசாயம் தனித்துவமானது பன்முகத்தன்மை கொண்டது. நமது மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் வழங்குகிறது. கடந்த 75 ஆண்டுகளில் நாடு தன்னிறைவு நிலையை எட்டி விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தேசமாக முன்னேறியுள்ளது. இது இந்திய விவசாயத்தை மாற்றியமைத்த பச்சை, வெள்ளை, நீலம், மஞ்சள், தங்கம், வெள்ளி, பழுப்பு, சாம்பல் மற்றும் வானவில் புரட்சிகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் கொள்கை ஆதரவு விவசாய புரட்சிகளால் ஏற்பட்டது. 1950 முதல் நிகர சாகுபடி பரப்பு 1.3 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ள போதிலும் உணவு உற்பத்தி 6 முதல் 70 மடங்கு அதிகரித்துள்ளது.

           ஜி20 இல் விவசாய முன்னோடி விஞ்ஞானிகளின் கூட்டம் (MACS) நிலையான மீள்திறன் மற்றும் இலாபகரமான விவசாய உணவு முறைகளை அடைவதற்கான அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை வைக்க கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஜி20 நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான  கலந்துரையாடல் அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு இது ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது.

              இந்தியாவின் ஜி20 தலைமையின் “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற கருப்பொருளுக்கு இணங்க, வேளாண் முன்னோடி விஞ்ஞானிகளின் (MACS) கூட்டம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை, சுகாதார அணுகுமுறைகள், டிஜிட்டல் விவசாயம் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கத்திற்கான தனியார் மற்றும் பொதுமக்கள் கூட்டாண்மை பற்றி விவாதிக்கும்.

                 இந்தியாவின் தலைமையின் கீழ் 12வது விவசாய முன்னோடி விஞ்ஞானிகளின் கூட்டம்(MACS) ஆரோக்கியமான மக்கள் மற்றும் பூமிக்கான நிலையான விவசாயம், உணவு அமைப்புகள் என்ற கருப்பொருளை அடையாளம் கண்டுள்ளது. இந்த கருப்பொருளில் நான்கு முன்னுரிமைப் பகுதிகள் கவனம் செலுத்தும் விவாதம் நடைபெறும்.  முதலில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து - அறிவியல், தொழில்நுட்பத்தின் பங்கு; இரண்டாவதாக, காலநிலையை எதிர்க்கும் விவசாயம் மற்றும் ஆரோக்கியம், மூன்றாவதாக விவசாய மாற்றத்திற்கான டிஜிட்டல் மயமாக்கல் இறுதியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பொது-தனியார் கூட்டாண்மை மூலம் நிலையான விவசாயத்தை உருவாக்குதல்.

            கூட்டத்தில் மகரிஷி முன்முயற்சி, அதாவது, சிறுதானியங்கள் பிற பண்டைய கால தானியங்கள் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி முன்முயற்சி . இந்த சர்வதேச முன்முயற்சியானது, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 உடன் இணைந்த வேளாண்-பல்வகைமை, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

             இந்த முயற்சிகளில், அறிவியல் அடிப்படையிலான தொழில்நுட்ப மற்றும் புதுமையான தீர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவுவதற்காக ஜி20 நாடுகள் ஒன்றிணைவதற்கான விருப்பங்கள் ஆராயப்படும்.

             இந்த நிகழ்வு ஆராய்ச்சி, கல்வி மற்றும் விவசாயத் துறையில் விரிவாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி20 மன்றத்தை வலுப்படுத்தும். நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளனர்.

***

AD/CJL/DL



(Release ID: 1916643) Visitor Counter : 205


Read this release in: English , Urdu , Hindi , Telugu