வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இத்தாலி நாட்டின் தொழில்துறை அமைச்சர் திரு மேட்டியோ சால்வினி ஆகியோர் இடையேயான இருதரப்பு பேச்சு வார்த்தையில் முக்கியமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது

Posted On: 14 APR 2023 12:36PM by PIB Chennai

இத்தாலி நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன் உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் அடோல்போ உர்சோவை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய உறவுகள் விவாதித்தார். மத்திய அமைச்சரோடு துறைசார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சேர்ந்த உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழு ஆகியோரும் சென்றுள்ளனர்.  

சமீபத்தில் இத்தாலி பிரதமர் திருமிகு ஜியோர்ஜியா மெலோனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது இருதரப்பு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை குறித்து பேசியதை இரண்டு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர். இந்தியாவின் எழுச்சியூட்டும் முன்னேற்றப்பாதையில் இளையோர் சக்தி, டிஜிட்டல் மயமாக்கல், 140 பில்லியன் மக்கள் தொகையினரின் நிதி ஆதாரம் குறித்து மத்திய அமைச்சர் திரு கோயல் முன்னிலைப்படுத்தி பேசினார்.  

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தொடர்பான சாதனைகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், 2021-ம் ஆண்டில், 40 சதவீதத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மூலம் சாதனைப் பெற்றதை வலியுறுத்தினார்.

உலக தரம் மிக்க உள்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்த தேசிய உள்கட்டமைப்புக் குழாய் திட்டத்திற்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 ட்ரில்லியனை அளவில் இந்தியா மூலதன முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் (மேக்-இன்-இந்தியா) மற்றும் இத்தாலியில் தயாரிப்போம் (மேட்-இன்-இத்தாலி) போன்ற முன்முயற்சிகள் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலமாக முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கோயல் கூறினார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நியாயமான, சமமான, தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

***

SRI/GS/RJ/DL



(Release ID: 1916524) Visitor Counter : 134