நிதி அமைச்சகம்
நிதி சேவைத்துறை செயலாளர் தமது துறையின் கீழ் உள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்
प्रविष्टि तिथि:
13 APR 2023 5:22PM by PIB Chennai
நிதி சேவைத்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, தமது துறையின் கீழ் உள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வர்ஷா ஜோஷி, மீன்வளத்துறை இணைச்செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர் திரு ராகுல் கபூர் மற்றும் வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வங்கி கணக்குத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் முத்ரா கடன் திட்டம், ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
***
AP/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1916297)
आगंतुक पटल : 163