வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது:770.18 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது

Posted On: 13 APR 2023 3:56PM by PIB Chennai

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் முந்தைய 2021-22 ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 770.18 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

சரக்கு ஏற்றுமதி 2021-22 ஆம் நிதியாண்டில் 422 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. இது 2022-23 ஆம் நிதியாண்டில் 6.03% அதிகரித்து 447.46 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது. இது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக ஆண்டு ஏற்றுமதியாகும்.

சேவைத்துறை ஏற்றுமதி 2021-22 ஆம் நிதியாண்டில் 254.53 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. இது 2022-23 ஆம் நிதியாண்டில் 26.79% அதிகரித்து முன் எப்போதும் இல்லாத புதிய சாதனை அளவாக 322.72 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது.

சரக்குகள் இறக்குமதி 2022-23 ஆம் நிதியாண்டில் 714.24 பில்லியன் டாலர் அளவிற்கும், சேவைகள் இறக்குமதி 892.18 பில்லியன் டாலர் அளவிற்கும் இருந்தது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் பொறுத்தவரை சீனாவில் இருந்து இறக்குமதி கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் மொத்த இறக்குமதியில் சீனாவிலிருந்து 15.43% சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் அது 13.79% ஆக குறைந்தது. சீனாவில் இருந்து மின்னணுப் பொருட்கள் இறக்குமதி முந்தைய நிதியாண்டில் 48.1% ஆக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் அது 41.9% ஆக குறைந்தது. சீனாவிலிருந்து உரங்களின் இறக்குமதியும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 

***

AP/PLM/MA/KPG


(Release ID: 1916259) Visitor Counter : 361


Read this release in: English , Urdu , Hindi